பஞ்சபூதப் பரந்தாமன்

I came across the above image recently. Inspired by this image, the below was scribbled. The structure of the write-up was inspired by “Thiruvundhiyaar” in Thiruvaachagam.

ஆகாயமாய் விளங்கி ஓங்காரத்தே தொடங்கி

ரீங்காரமாகுங் குழல் உந்தீ பற !  நாத

ஆதாரமாகுங் குழல் உந்தீ பற !!

 

தென்றலாய்த் தவழ்ந்து மெய்மீது படர்ந்து

காற்றான மூச்சென்று உந்தீ பற ! அந்த

முகுந்தன் மூச்சென்று உந்தீ பற !!

 

இருளிளிருந்து மீட்டிட நெறியைக் காட்டிட

ஒளியாய்ச் சுரந்தகண் உந்தீ பற ! கண்ணன்

மணியாய் மிளிர்ந்தகண் உந்தீ பற !!

 

ஆழியில் முகர்ந்து மேகமாய் உயர்ந்து

மழையாய்ச் சொரிந்தநீர் உந்தீ பற ! எம்

மதுசூதனன் எச்சிலென்று உந்தீ பற !!

 

நேசப்பட்டு இழுத்து அவன்வாசனையால் இவ்வுலகில்

ஆசைப்பட்டு வாழச்செய்து உந்தீ பற ! அந்தக்

கேசவனின் கருங்கூந்தல் உந்தீ பற !!

 

பஞ்சபூதப் பம்பரத்தை காலமெனுங் கயிற்றால்

சுற்றிமாயம் புரிந்தகண்ணன் உந்தீ பற ! எனைப்

பற்றியாண்ட பரந்தாமன் உந்தீ பற !!

 

குறிப்பு:

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடிய “வளைந்தது வில்லு” என்று தொடங்கும் திருவுந்தியாரால் கவரப்பட்டு அதே வடிவமைப்பில் முயற்ச்சித்தது.

உந்தி-பறத்தல் என்பது தமிழக நாட்டுப்புறச் சிறுமியரின் விளையாட்டுகளில் ஒன்று.  இரண்டு சிறுமியர் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டும், கால்களால் ஒருவரை ஒருவர் உதைந்துகொண்டும் சுற்றுவது உந்திப்பறத்தல்.  கைகளைப் பிடிக்கும்போது வலக்கையை வலக்கையாலும், இடக்கையை இடக்கையாலும் எதிரெதிர் நின்று பிடித்துக்கொள்வர். இதனால் கைகள் பின்னலிட்டது போல் இருக்கும்.  பின்னர் வலப்புறமாகச் சிறிது நேரமும், இடப்புறமாகச் சிறிது நேரமும் சுழல்வர். இப்படிச் சுழலும்போது பாட்டுப் பாடிக்கொண்டே சுழல்வர்.  பாடிக்கொண்டே பறப்பது உந்தி-பறத்தல்.

  1. Wow 🙂 what a thought ! நீ கொடுத்த பால் ஒன்றும் எனக்கு வேண்டாம்; என் ஐயன் உதிர்த்த தேவாரம் ஒன்றே போதும் !

  2. அருமை! அருமை!! -EEE – Experience / Education / Environment is the deciding factor for our living . வாழ்க பல்லாண்டு வளர்க…

Leave a comment